உள்ளூர் செய்திகள்

லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது

Published On 2022-08-22 13:54 IST   |   Update On 2022-08-22 13:54:00 IST
  • லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • பணம் மற்றும் 31 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

புதுக்கோட்டை:

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மேற்பனைக்காடு கிராமத்தில் ஒரு கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கீரமங்கலம் சுப்பையன் (வயது 68) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 370 மற்றும் 31 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News