உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் இலக்கிய பேரவை கூட்டம்

Published On 2023-06-27 12:51 IST   |   Update On 2023-06-27 12:51:00 IST
  • ஆலங்குடியில் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் கவிஞர்கள் நேசன்மகதி மற்றும் ரமா ராமநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆலங்குடி,

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலக்கிய பேரவை தலைவர் அ.க. முத்து தலைமை வகித்தார். செயலாளர் பாபு ஜான், பொருளாளர் கருணாகரன், கௌரவ ஆலோசகர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவிஞர்கள் நேசன்மகதி மற்றும் ரமா ராமநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் (ஓய்வு) ராஜசேகரன், தலைமை ஆசிரியர் வின்சென்ட், முருகேசன், முத்துராமன் கருப்பையா, மரம்சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News