விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டம்
- டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது
- அறந்தாங்கி அருகே ஏம்பல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
புதுக்கோட்டை,
ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமக்கள் போக்குவரத்திற்காக, அரசு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றிற்கு ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லுகின்ற பேருந்து நிலையத்தின் அருகே 10 மீட்டர் இடைவெளியில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது.இதனால் பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பெண்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சத்துடன் வந்து செல்லுவதாகக்கூறி, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மேலும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை கண்டித்தும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் மோட்சகுணவழகன், மாநில துணை செயலாளர் கலைமுரசு, மண்டல துணை செயலாளர் திருமறவன் மாவட்ட அமைப்பாளர் சுடர்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.