பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், கோப்பைகளை வழங்கப்பட்டது
புதுக்கோட்டை,
மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர்.ஜலஜாகுமாரி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் குமரேசன் மற்றும் கிருபா ஜெபராஜ் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மதுவிலக்குமற்றும் அமலாக்கத்துறை) டாக்டர்.வருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுத்தேர்வில் மாநிலஅளவில் மூன்றாமிடமும், மாவட்டஅளவில் முதலிடம் பெற்ற மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி, சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வில் மாவட்டஅளவில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த மவுண்ட் சீயோன் சி.பி.எஸ்.இ பள்ளிமாணவன, மாணவிகளுக்கும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், கோப்பைகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து பள்ளியின் முதல்வர் நன்றி கூறினார்.