உள்ளூர் செய்திகள்
கோவிணிகிடங்கு கோவில் கும்பாபிஷேகம்
- கோவிணிகிடங்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா கோவிணிகிடங்கு கிராமத்தில் உள்ள மகாலிங்கமூர்த்தி, ஜெகதாம்பாள், விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து லோகநாத அய்யங்கார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.