உள்ளூர் செய்திகள்
நரிக்குறவர் சமூகத்தினருடன் சுதந்திர தின கொண்டாட்டம்
- புதுக்கோட்டையில் நரிக்குறவர் சமூகத்தினருடன் தேசிய கொடி ஏற்றி, சுதந்திர தின கொண்டாடப்பட்டது
- நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி கோட்ட அலுவலத்தின் சார்பாக ரெங்கம்மாள் சத்திரத்தில் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை,
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருச்சி கோட்ட அலுவலத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைவாழ் மக்கள், நரிகுறவர்கள் சமூக மாணவ மாணவிகள் மற்றும் அச்சமூக தலைவர், தலைவிகளுடன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ரெங்கம்மாள் சத்திரம் மாணவ மாணவிகளோடு (நரிகுறவர் இனம்) கோட்ட நிர்வாகப் பொறியாளர் த.இளம்பரிதி தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினார். உதவி நிர்வாகப் பொறியாளர் ச.ஷகிலா பீவி, உதவி பொறியாளர்கள் மு.நவனீதகண்ணன் மற்றும் எஸ்.பிரியாங்கா, சமுதாய வளர்ச்சி அலுவலர் செ.வினோதா, கிராமத் தலைவர்சி.மணி, துணை தலைவர் ச.சுரேஷ் உடன் இருந்தனர். மேலும் போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.