ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை-புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தல்
- ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்
- ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவ லகத்தில், 1432 ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகள் ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோன்று, நடப்பு பசலி (1432) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கொடும்பாளுர் உள்வட்ட கிராமக்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தி ல் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொடும்பாளுர் வருவாய் கிராம சரகத்திற்கு ட்பட்ட கிராமங்களான ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, மீனவலி, அகரப்பட்டி, பொய்யாமணி, தேராவூர், இராஜகிரி, கொடும்பா ர், தென்னம்பாடி, கசவனூர், தேங்காய் தின்னிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
மேலும் நீர்பழனி உள்வட்டத்திற்கும், வரும் 20-ந் தேதி அன்று விராலிமலை உள்வட்ட த்திற்கும் வருவாய்த்தீர் வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிடப்ப ட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் முருகப்பன், திருச்சி மண்டல துணை இயக்குநர் ராஜாமணி, கோட்ட ஆய்வாளர் சண்முகராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.