உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி

Published On 2022-11-11 12:58 IST   |   Update On 2022-11-11 12:58:00 IST
  • இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி நடைபெற்றது
  • உதவி திட்ட அலுவலர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை:

திருவரங்குளம் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான 5 ஆம் கட்ட பயிற்சியினை மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து குழந்தைகளும் மொழி மற்றும் கணிதப்பாடங்களில் உள்ள அடிப்படைத் திறன்களை அடைய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள தன்னார்வலர்கள். முன்னறிவுத் தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.முன்னறிவுத் தேர்வின் மூலம் கற்றல் இடர்பாடுளைக் கண்டறிந்து அதில் உள்ள திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். முன்னறிவு தேர்விற்கான வினாக்களை கரும்பலகையிலோ அல்லது தாள்களிலோ எழுதி தேர்வினை நடத்த வேண்டும் என்றார்.

ஆய்வின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News