குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை இயக்குனர் தாயார் படத்திறப்பு நிகழ்ச்சி
- சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையாரின் 30-வது நாள் நினைவு அனுசரிப்பு மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி குடுமியான்மலையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்
புதுக்கோட்டை ,
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையாரின் 30-வது நாள் நினைவு அனுசரிப்பு மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி குடுமியான்மலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சந்திரா அம்மையாரின் திருவுருவ படத்தினை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜோசப் பீட்டர் தன்ராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் டேனியல் ஜான் கென்னடி, முன்னாள் அரசு வக்கீல் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை ஜாபர் அலி, பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், கைவிலிப்பட்டி எம்.சுப்பையா, திருக்களம்பூர் பழனிசாமி, எஸ்.நல்லகுமார், எஸ்.ராமையா, தோப்பட்டி ஜெயசீலன், ஆர்.மாரியபன் மற்றும் சர்வக்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் குடும்பத்தினர் செய்திருந்தனர்.