- சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்
- பால் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீழாத்தூர் அருகே கட்ராம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). கூலித் தொழிலாளியான இவர், கீழாத்தூரில் இருந்து ஊருக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கீழாத் தூரில் உள்ள தனியார் பால் கொள்முதல் நிலையத்துக்கு பால் ஏற்றி வந்த சுமை ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே சந்திரசேகர் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து வடகாடு போலீசரார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுமை ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகையை தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, த னியார் பால் நிறுவனத்தை சந்திரசேகரின் உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி மற்றும் வடகாடு போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.