உள்ளூர் செய்திகள்
மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்
- புதுக்கோட்டையில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
- மயக்கம் தெளிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி போலீசில் புகார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 70). இவர் காய்கறிகள் வாங்குவதற்காக சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவது போல இருந்ததால், உட்கார்ந்து விட்டார். இதையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் பேச்சுக்கொடுத்ததாகவும், மயக்கம் தெளிந்த பின் பார்த்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.