உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் உதடு, உள்அண்ணம் பிளவுபட்டோருக்கு இலவச மருத்துவ முகாம்

Published On 2022-06-30 14:52 IST   |   Update On 2022-06-30 14:52:00 IST
  • உதடு, உள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
  • ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாமானது டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் சலீம் முன்னிலையில், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா முகமது தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பெனிட்டா பெக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதடு, உள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் தி ஸ்மைல் டிரெய்ன் உதடு/உள் அண்ணப்பிளவு சீரமைப்பு மண்டல மையம் மூலமாக 14000-க்கும் மேற்பட்ட இலவச அறுவை சிகிச்சைகள் சிறந்த முறையில் செய்யப்பட்டது என எடுத்துக் கூறினார்.

இதில் சமூக ஆர்வலர் ஸ்டெல்லா புஷ்பராணி கலந்துக் கொண்டார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சைப் பற்றியும், தங்குமிடம், மருந்து மற்றும் பிற சந்தேகங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர்சந்திரசேகர் பதிலளித்தார்.

முகாமில் உதடு அண்ணம் பிளவு பட்ட குழந்தைகள் மற்றும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மறு ஆய்வு செய்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார். மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் பஷீர் அகமது இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News