சாலை மேம்பாட்டிற்கு அடிக்கல் நாட்டு விழா
- 11.15 கோடி ரூபாய் அளவிலான சாலை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆலங்குடியில் நடைபெற்றது
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம், வெள்ளாகுளம், சிக்கப்பட்டி, மணவாளன் நகர் போன்ற பகுதிகளில் சாலையை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் புதிய சாலை பணிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் அடிக்கல் நாட்டினார். சுமார் 11.15 கோடி மதிப்பீட்டில் செப்பனிடப்பட உள்ள பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் கொத்தமங்கலத்தில் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை சுற்றுச்சூழல் அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பள்ளத்திவிடுதி ஊராட்சி தலைவர் நாராயணன், கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர் சுஜாதா வளர்மதி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செங்கோடன், செங்கோல், சையது இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.