உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை

Published On 2023-08-05 12:31 IST   |   Update On 2023-08-05 12:31:00 IST
  • புதுக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்
  • கோவில் திருவிழா தடைபட காரணமாக இருந்ததால் வெட்டி கொலை செய்ததாக வாலிபர் வாக்குமூலம்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இளங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரகோபாலன் (எ) சங்கர் (வயது 56) தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர்.தற்போது அவரது மனைவி முத்துலட்சுமி ஊராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சங்கர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிபடைகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் இளங்குபட்டி அருகேயுள்ள மேல முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற குண்டு கார்த்திக் (32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.இளங்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலை ஒட்டி சங்கருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை கோவிலுக்கு கொடுக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.சங்கர் நிலத்தை தர மறுததார். ஆனால் நிலத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்தார்.இந்த பிரச்சனையால் கடந்த 12 ஆண்டுகளாக அய்யானார் கோவிலில் விழா நடைபெறாமல் உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அய்யானார் கோவில் அருகே உள்ளமுனி கோவிலில் சங்கர் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போது மதுபோதையுடன் நான் அங்கு வந்தேன். எங்கள் இருவரிடையே அய்யனார் கோவில் பிரச்சனை குறித்து வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த நான், தேங்காய் உடைக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை வெட்டினேன். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றார்.நான் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இத போலீசார் அவரை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில்,கார்த்திக் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி தண்டனை பெற்று சிறையில் இருந்துள்ளார். கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News