விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி
- விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி வழங்கப்பட்டது
- நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டத்தில்
புதுக்கோட்டை:
விராலிமலை வட்டாரத்தில், மாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் விவசாயகளுக்கு வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் சம்பா பருவத்தில் நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டு புழு, குலைநோய், புகையான் தாக்குதல் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் அதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் பற்றியும் சிறப்பாக விவசாயிகள் மத்தியில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி ப.தமிழ்செல்வி சிறப்பாக விளக்கம் அளித்தார்.
ஏக்கருக்கு 5 எண்கள் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் ஆண்பூச்சிகள் அதிக அளவு கவரப்பட்டு பெண் பூச்சிகளின் இனபெருக்கத்தை கட்டுப்படுத்தபடுகின்றன. விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து இழுப்பதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்தப்படுகிறது என்பதனை பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கம் அளித்தார்
மீன் வளத்துறையில் மாவட்ட திட்ட செயாளார் குயிலி கூறும் போது, தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துறைத்தார். உழவன் செயலில் பதிவிறக்கம் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் ஷீலாராணி வேளாண்மை அலுவலர் கூறினார். இறுதியாக இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கராசு துணை வேளாண்மை அலுவலர் நன்றி உரை கூறினார்.