உள்ளூர் செய்திகள்
கல்லாக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதி
- கல்லாக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்
- தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லாக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயப்பகுதியாகும். பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீருக்காக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பம்பு செட்டுகள் இயங்காதால் பயிர்கள் காய்ந்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.