ஆசிரியர்களுக்கு அனுபவக் கற்றல் பயிற்சி
- புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அனுபவ கற்றல் பயிற்சி
- 2 நாட்கள் நடைபெற்றது
புதுக்கோட்டை,
மௌண்ட்சீயோன் சர்வதேசப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியர் களுக்கான பயிற்சிமுகாம் இரு தினங்கள் நடைபெற்றது. இதில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்."திறன் மற்றும் அனுபவக் கற்றல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியகத்தை சிபிஎஸ்இ சென்னை திறன் பயிற்சித் திட்டபொறுப்பாளர்கள் என்.எஸ். தினேஷ் மற்றும் ஜெயப்பிரியா, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இயக்குநர இந்திரா விஜயகுமார் ஆகியோர் வழி நடத்தினர்.பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி வரவேற்புரை வழங்கினார். அனுபவ கற்றலுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இப்பயிற்சி யகத்தில் ஆசிரியர்களுக்கு கற்பிக்க ப்பட்டது. இறுதியில் இப்பயிற்சியகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிக் குறித்த மதிப்பீட்டை வழங்கி, பயிற்சிக்கான சான்றிதழைப் பெற்றனர் .இந்தபயிற்சி முகாமில் வெளி மாநில மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர் கள் கலந்து கொண்டனர் . இறுதியில் நடுநிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுஷ்மிதாடே நன்றி கூற நிகழ்வு சிறப்பாக நிறை வுற்றது.