உள்ளூர் செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம்

Published On 2023-10-21 12:17 IST   |   Update On 2023-10-21 12:17:00 IST
  • ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் திறக்கப்பட்டது
  • அமைச்சர் மெய்ய நாதன் திறந்து வைத்தார்

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து கணினி இயக்குனர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-கலைஞர் உரிமைத்தொகை கிடைக்க பெறாமல் இருப்பவர்கள் குறித்து அவர்களது விண்ணப்பத்தை பரிசோதனை செய்து எந்த நிலையில் உள்ளது என்று பிரிண்ட் எடுத்து அந்த மனுவில் இணைத்து வைக்க வேண்டும்.இவ்வாறாக நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி என்றும், பேரூராட்சியின் விண்ணப்பங்களையும் சேகரித்து விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும் அளவில் பணி செய்ய வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ராசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், சையது இப்ராகிம், கருணாநிதி, லெட்சுமணன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News