வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு
- வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வயலில் களையெடுக்க சென்று விட்டனர்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி அருகே திட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). இவரது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நேற்று அவருக்கு சொந்தமான வயலில் களையெடுக்க சென்று விட்டனர்.
இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டின் வழியாக சென்றவர்கள் அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்."