உள்ளூர் செய்திகள்

விஷம் வைத்து நாய்கள் கொலை

Published On 2023-07-26 13:21 IST   |   Update On 2023-07-26 13:21:00 IST
  • விஷம் கலந்த உணவை உண்ட 2 நாய்கள் செத்தன
  • 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை உய்யக்கொண்டான் காலனி பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 48). விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த இவர் கணேஷ்நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனது வீட்டின் அருகே 2 தெரு நாய்கள் விஷம் கலந்த உணவை தின்றதால் இறந்ததாகவும், சிலர் வேண்டுமென்றே உணவில் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News