அறந்தாங்கி பகுதிகளில் தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- அறந்தாங்கி பகுதிகளில் தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் பாகநிலை முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணமேல்குடியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். அப்போது புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவது, கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட பணிகளை பாகநிலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதே போன்று ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் உதயம் சண்முகம், பொன்துரை ஆகியோர் ஏற்பாட்டிலும், அறந்தாங்கி நகரத்தில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டிலும் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகர்மன்றத் துணை தலைவர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஹரி விமலாதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.