உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு விளக்கமோட்டார்சைக்கிள் பேரணி ஆலங்குடி வந்தது

Published On 2023-11-17 12:02 IST   |   Update On 2023-11-17 12:02:00 IST
சேலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு விளக்க மோட்டார்சைக்கிள் பேரணி ஆலங்குடி வந்தது

ஆலங்குடி, 

தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் பேரணியாக தமிழகம் ம்ழுவதும் சென்று கட்சியினர், தொண்டர்களை சந்தித்து வருகிறார்கள்.

பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். 188 மோட்டார் சைக்கிள்களில் பேரணி தொடங்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் 15 நாட்களில் 8647 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு 504 இடத்தில் வரவேற்பு வழங்கப்படுகிறது. நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி தொகுதியில் சுப்பிரமணியபுரம், கீரமங்கலம், கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வருகைதந்த இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் திரளாக வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அருவடிவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி நகர செயலாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டிமுருகன், சையது இப்ராகிம், கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News