அறந்தாங்கி நற்பவளக்குடி ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் 13 கோரிக்கைகள் மீது விவாதம்
- அறந்தாங்கி நற்பவளக்குடி ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது
- கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நற்பவளக்குடி ஊராட்சியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் சுப மணி மொழியன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது சுத்தமான குடிநீர் விநியோகிப்பது, கிராம வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சித்ரா, தலைமை ஆசிரியர்கள் சொக்கலிங்கம், வள்ளிக்கண்ணு, ஊராட்சி செயலர் கருப்பையா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதிமூலம், வீரையா , தேன்மொழி, சித்திரா, நவநீதம், சிஎல்எஃப் கவிதா, சமுதாய வள பயிற்றுனர் விடத்தி, மக்கள் நலப்பணியாளர் ராக்கம்மாள், பணித்தள பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.