உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு குழுக் கூட்டம்

Published On 2023-07-11 11:51 IST   |   Update On 2023-07-11 11:51:00 IST
  • புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது
  • எம்.பி. திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தலைமையில் , மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் எம்.பி. கூறும்போது,புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் 45 திட்டப் பணிகள் விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், செலவு செய்ய ப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. என்று அவர் கூறினார்.இக்கூட்டத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News