உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை ஊழியர்கள்ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-23 14:26 IST   |   Update On 2023-08-23 14:26:00 IST
  • புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர்கள்ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்
  • அடிப்படை பணியிடங்களில் பதவி உயர்வினை வழங்க மறுக்கும்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின்(பொது) ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர்பேசினர். அடிப்படை பணியிடங்களில் பதவி உயர்வினை வழங்க மறுக்கும்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை(பொது) கண்டித்தும்,கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு அரசால் பணியிடங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டும் மாவட்ட நிர்வாகத்தில் பணி நியமன ஆணைவழங்க நீண்ட காலதாமதம் செய்வதை கண்டித்தும், முக்கிய பணிகளுக்குபுதிய பணியிடத்திற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி பணியிடங்கள் பெற்றும் பணியிடங்களை நியமிக்காமல் மாற்றுப் பணிஎன்ற பெயரில் பல மாதங்களாக பணிபுரிய வைப்பதை கண்டித்தும்ஆர்ப்பாட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News