தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
- தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தி னசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில், ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 48 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலக வளாகத்தில் கூட்டம் கூட்டமாக நாய்கள் கூட்டம் சுற்றி வருகின்றன. இந்த நாய் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களை விரட்டுவதோடு கடிக்கவும் பாய்வதால் பொதுமக்க ள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் வருவோரை பேருந்து நிலையம் வரை குறைத்துக் கொண்டே துரத்திச் செல்வதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு வரவே பொதுமக்கள் அஞ்சி நடுங்கும் சூழல் ஏற்பட் டுள்ளது. பொதுமக்கள் மட்டும் இன்றி, வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரி யும் ஊழியர்கள் உட்பட அனைவரையும் நாய்கள் தொந்தரவு செய்து வருகின்றன.
நாய் பிரச்சினைக்கு ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து செ யல்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டு என பொதுமக்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் எதிர்பார்ப்புடன் காத் திருக்கின்றனர்.