- அரசு பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
- உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ம்வகுப்பு முடித்துசென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்துப்பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பி இருந்தது. இதன் அடிப்படையில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித்தலைமையாசிரியர் நவநீதகிருஸ்ணன் தலைமைவகித்தார். ஆசிரியர்கள் ரமேஸ் கண்ணதாசன் செம்மலர் ஜெயக்குமார் மகாலிங்கம் கையூம் ஆகியோர் இந்தப்பள்ளியில் 12ம்வகுப்பு முடித்து உயர் கல்வி படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிமுறைகள் குறித்தும் மேற்படிப்பின் அவசியம் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பேசினார்கள். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மேல்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள படிப்புகள் குறித்து விளக்கினர்.