புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் திட்ட பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம்
- புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் திட்ட பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
- தமிழக அரசின் திட்ட பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது இன்றியமையாத கடமையாகும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசின் திட்ட பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது இன்றியமையாத கடமையாகும்.
இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அதனடிப்படையில் இக்கூட்டம் அனைத்துத்துறை உயர் அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரு துறைக்கு அரசின் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதற்குள்ள பணிகளை விரைவில் தீர்க்கப்படுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அரசின் திட்டங்களை நிறைவேற்று வதற்கான இடத் தேர்வு, கட்டடப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற முடியும்.
எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசால் செய ல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பணிகளை நிறைவேற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)தங்கவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.