உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் அய்யப்பன் கோவில் கட்ட ஆலோசனை கூட்டம்

Published On 2023-04-17 11:35 IST   |   Update On 2023-04-17 11:35:00 IST
  • பொன்னமராவதியில் அய்யப்பன் கோவில் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • அய்யப்பன் படத்திற்கு மாலை அணிவித்து, வணங்கி, வழிபாடு செய்து, சரண கோஷத்துடன் கூட்டம் தொடங்கியது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி நகரில் அய்யப்பன் கோவில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கான கட்டுமான பணி துவங்குவது சம்பந்தமாக பொன்னமராவதி வலையபட்டி அண்ணாமலை திருமண மண்டபத்தில் அய்யப்ப பக்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அய்யப்பன் படத்திற்கு மாலை அணிவித்து, வணங்கி, வழிபாடு செய்து, சரண கோஷத்துடன் கூட்டம் தொடங்கியது. அகில பாரத அய்யப்ப சேவா சங்கத் தலைவர் சொ.முத்தாவுடையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்க்கு ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர், பூலாங்குறிச்சி கருப்பையா குருசாமி முன்னிலை வகித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறினர்.

Tags:    

Similar News