உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2023-08-28 12:08 IST   |   Update On 2023-08-28 12:08:00 IST
  • அண்டனூர் ஊராட்சியில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது
  • முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை தொடங்கி வைத்தார்

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சி வேலாடிப்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்றது. முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை தொடங்கி வைத்தார். முகாமில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சத்துணவு பெட்டகங்களும் மங்களப் பொருட்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், திமுக ஒன்றிய செயலாளர் பரமசிவம், அண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் இ.எஸ்.ராஜேந்திரன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சித் குமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News