உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2023-07-07 07:55 GMT   |   Update On 2023-07-07 07:55 GMT
  • அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்
  • கலெக்டர் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு முதலமைச்சரால் மக்க ளுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து மக்கள் நலத்திட்டங்களை துரிதப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தினை கேட்டறிந்தார்கள்.

மேலும் பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக போதுமான அளவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதானம் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார். ஆதனைத் தொடர்ந்து, அன்னவாசல் அரசு மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் மருத்துவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News