- அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றது.
- 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி பொன்னமராவதி வட்டார அளவிலானஅரசு பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப்போட்டிகள் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை கி.நிர்மலா தலைமைவகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் ராமதிலகம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி காளிதாஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர்.
பயிற்சியாளர் முகமது இக்பால் போட்டியை வழிநடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்மணி, கங்காதேவி மற்றும் வட்டார பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டியை ஒருங்கிணைத்தனர். போட்டியில் பொன்.புதுப்பட்டி, வார்ப்பட்டு, ஆலவயல், மேலைச்சிவபுரி உள்ளிட்ட 29 அரசு பள்ளிகளின் மாணவியர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியை சோம.நாராயணி நன்றி கூறினார்.