கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சியை காரைக்குடி பல்கலைக்கழக பேராசிரியர்இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராஜேந்திரன், அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பே.முத்துசாமி, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளார் சாலை செந்தில் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.