உள்ளூர் செய்திகள்
- வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை, பணம் திருடுப்பட்டுள்ளது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் கமலம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் பூலாங்குறிச்சியில் அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் பணிக்கு சென்றவுடன் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தையின் பள்ளி விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 கிராம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் ரூ.2000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதையறிந்து காவல்துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.