உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-26 13:35 IST   |   Update On 2023-07-26 13:35:00 IST
  • புதுக்கோட்டையில் புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில 6-வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 28 முதல்ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.புத்தகத்திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி,கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் முன்பாகத் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கொடி அசைத்துத்தொ டங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா கோட்டாட்சியர்முருகேசன்,ஆதிதிராவிட நல அலுவலர் கருணாகரன், புதுக்கோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ,புத்தகத் திருவிழா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி ,மணவாளன், பாலகிருஷ்ணன், வீரமுத்து, முத்துக்குமார், சதாசிவம், விமலா,ராசி.பன்னீர்செல்வம், பவனம்மாள்,மு.கீதா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் வரவேறப்புக்குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் புத்தகங்களை கையில் ஏந்தியும், பாலூன்களைப்பறக்கவிட்டும், புத்தகங்களின் அவசியம் குறித்து முழுக்கங்களை எழுப்பியவாறும் நடைபெற்ற இப்பேரணி பழைய பேருந்து நிலையம்அண்ணா சிலை,வழியாக கீழ ராஜ வீதி,வடக்கு வீதிவழியாக நகர் மன்றத்தை வந்தடைந்தது. இதைப்போல பொன்னமராவதி,கந்தர்வகோட்டை,கறம்பக்குடி மாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News