உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா

Published On 2023-09-16 14:28 IST   |   Update On 2023-09-16 14:28:00 IST
  • ஆலங்குடி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது
  • சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை,

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில் பெஞ்ச் , டெஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராம் தலைமை வகித்து டெஸ்க் பெஞ்ச்களை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்செல்வம் , தனராஜ் , செல்வராஜ், ஆலங்குடி நகர தலைவர் அரங்குளவன் மற்றும் காங்கிரஸ் கட்சி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News