உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-07-18 11:58 IST   |   Update On 2023-07-18 11:58:00 IST
  • பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
  • முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுத் தொகை வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகுமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தலைவர் சிராஜுதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற சிலை தடுப்பு காவல் துறை அதிகாரி பொன். மாணிக்கவேல் கலந்துகொண்டு அரசு பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ரூ.2.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் அவர் பேசும் பொழுது, பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருக்கும் அச்சம், வெட்கம் ஆகியவற்றை தூக்கி எறிந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நன்கு படித்து பொது வாழ்விலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா சீனிவாசன், அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் காடவராயர், பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை ஷப்னம் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News