உள்ளூர் செய்திகள்

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்

Published On 2023-06-13 12:49 IST   |   Update On 2023-06-13 12:49:00 IST
  • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது
  • இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறை சார்பாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் துறையின் துணை ஆய்வாளர்கள் வி.கே.நடராஜன் மற்றும் பி.குணசீலன் முன்னிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குழந்தைத் தொழிலாளர் எவரையும் பணியில் அமர்த்த மாட்டேன், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றுவோம், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக மாற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பதாகையில் கையெழுத்திடப்பட்டது. இதில் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார்.

Tags:    

Similar News