உள்ளூர் செய்திகள்
- கந்தர்வகோட்டை சிவன் கோவில்களில் சிவனுக்கு அன்னாபிஷேக் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்
கந்தர்வகோட்டை,
ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் பௌர்ணமி சாமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிவபெருமானை தரிசித்தனர்.