உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
- புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் உத்தரவிட்டார்
- கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.10,000 வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆட்சியரின் ேநர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.