உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-02-01 12:17 IST   |   Update On 2023-02-01 12:17:00 IST
  • விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
  • தரமான உரம் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 152.726 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46.845 மெ.டன் பயறு விதைகளும், 14.347 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 3.872 மெ.டன் சிறுதானிய விதைகளும், 2.603 மெ.டன் எள் விதைகளும் 9.810 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியூதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1979 பயனாளிகளுக்கு 2233 எக்டர் பரப்பளவில் நுண்ணீர்பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 கோடியே 26 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்(காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜெயஸ்ரீ, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News