ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 54 பேர் கைது
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர்
- திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்
புதுக்கோட்டை:
திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் தொடங்கப்படுவதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. சா ர்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகளை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கைது சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் நாகுடியில் சாலைமறியல் போராட்டம் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, மாவட்டத் துணைத் தலைவர் சந்தானலெட்சுமி, மீனவர் அணி மாநில செயலாளர் சோனகருப்பன், மாவட்ட ஆன்மீக அணி வீரமாகாளியப்பன், தெற்கு ஒன்றியத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது 24 பேரை நாகுடி போலீசார் கைது செய்தனர்.
இதே ே பால் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் தவமணி தலைமையில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தொழில் பிரிவு செயலாளர் ஏ. வி.சி. கணேசன் முன்னிலை வகித்தார்.சாலை மறியலில் ஈடுபட்ட கார்த்திகேயன், தங்கவேல், சந்திரன், ராகவன், முத்துக்குமார், முருகானந்தம் உள்ளிட்ட 30 நபர்களை கந்தர்வகோட்டை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்.