ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
- ஆடு திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது ெசய்யப்பட்டனர்
- ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில்
புதுக்கோட்டை:
ஆலங்குடி, கறம்பக்குடி, செம்பட்டி விடுதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆடுகளை பறிகொடுத்தவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான தனிப்படை போலீசார், இச்சடி முள்ளிக்காப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்ளிக்காபட்டி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் போலீசார் விசாரணையில் ஆடுகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முள்ளிக்காப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (வயது 38), கல்லாக்கோட்டை முருகேசன் (43), வேலாடிப்பட்டி குமார் ( 35), சுந்தம்பட் டி ராமராசு ( 32), கன்டினிவயல் ஜோதி ( 21)ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் வாகனத்தில் இருந்த ஆடுகள் 46 மற்றும் ஆடு திருட்டில் பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களை பறிமுதல் செய்து செம்பட்டி விடுதி காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் காவல் ஆ ய்வாளர் அழகம்மை ஆகியோர் வழக்கு பதிவு செய்த செம்பட்டிவிடுதி போலீசார் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக் கோட்டை சிறையில் அடைத்தனர்