- வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
- மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்(27), கல்லூரி மாணவர் சேதுராமன்(22), தங்கராஜ்(55) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது பின்புறமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரி சென்றுள்ளது.
பின்னால் லாரி வருவதை கவனிக்க தவறிய இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் திடீரென பிரேக் அடித்து திரும்பியுள்ளனர். லாரி ஓட்டுனர் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரு சக்கர வாகனமீது மோதி விபத்தானது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இதில் காயமடைந்தவர்கள் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.