உள்ளூர் செய்திகள்

கள்ள நோட்டு கொடுத்து மது பானம் வாங்கிய 2 பேர் கைது

Published On 2023-08-08 12:56 IST   |   Update On 2023-08-08 12:56:00 IST
  • புதுக்கோட்டை டாஸ்மாக்கில் கள்ள நோட்டு கொடுத்து மது பானம் வாங்கிய வாலிபர் உள்ளிட்ட 2 பேர் கைது
  • 40 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம்,மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்குவதாக மணமேல்குடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் யாரேனும் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்குகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்த நிலையில் மணமேல்குடியில் உள்ள ஒரு மதுபான கடையில் அசேன் முகமது என்பவர் ரூ. 500 கொடுத்து மதுபானம் கேட்டுள்ளார்.அந்த ரூபாய் நோட்டை பெற்ற டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அந்த நோட்டு கள்ள நோட்டு என்பதை கண்டறிந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று அசேன் முகமதுவிடம் விசாரணை மேற்கொண்டார்.அப்போது அசேன் முகமது தன்னிடம் ரூபாய் நோட்டை கொடுத்தது ஹுமாயின் என்பவர் என தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் ஹுமாயினை பிடித்து விசாரித்த போது அவரிடம் சுமார் 40 ஆயிரம் மதிப்புடைய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர்.உடனே இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கள்ளநோட்டை பறிமுதலீ செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News