உள்ளூர் செய்திகள்

1291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-15 14:42 IST   |   Update On 2022-12-15 14:42:00 IST
  • 1291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • பொன்னமராவதி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

மேலும் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூ 2.08 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. முகாமில் பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, தேனூர் ஊராட்சிமன்றத்தலைவர் வி.கிரிதரன், வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News