உள்ளூர் செய்திகள்

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் கடும் சரிவு

Published On 2022-06-22 14:01 IST   |   Update On 2022-06-22 14:01:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் கடந்த ஆண்டுகளை விட கடும் சரிவை சந்தித்து ள்ளது.
  • வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 106 அரசு பள்ளிகள் உட்பட 172 பள்ளிகளைச் சேர்ந்த மாணர்கள பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதே போன்று 215 அரசுப் பள்ளிகள் உட்பட 333 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ள புதுக்கோட்டையில் கடந்த 2020-ல் 93.26 சதவீதமாக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 2022-ல் 91.58 சதவீதமாக குறைந்துள்ளது.

இதே போன்று 10-ம் வகுப்பு தேர்ச்சியைப்பொறுத்தவரை 2020-ல் 96.41 சதவீதமாக இருந்தது. தற்போது 87.85 சதவீதமாக குறைந்துள்ளது. இடையில் 2021-ம் ஆண்டில் படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் மாநில அளவிலான பட்டியலில் முன்னேறி இந்த புதுக்கோட்டை மாவட்டம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறிய போது :-

தற்போது பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.

அதாவது கடந்த 2020-ல் பிளஸ் 2 தேர்வில் 16-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது. இதே போன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது.

இதே போன்று 100 சவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அரசின் திட்டங்கள் நம் மாவட்டத்தில் முறையாக அமல்படுத்தவில்லையோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு தொழிற்கல்விகளை கூட கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தலில் உள்ள இடைளெியை போக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து ஆசிரியர்களிடம் போட்ட போது கொரோனா பரவலால் தேர்ச்சி பெற்ற அனைவரும் பொதுத்தேர்வை எழுதினர். முறையாக படிக்காமல் தேர்வுக்கு செனறால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோரால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போயிருக்கலாம்.

மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. அத்துடன் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பப்படவில்லை. மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என்றனர். 

Tags:    

Similar News