உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை கெட்டி தீர்த்தது
- சாலையோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது .திடீரென்று பலத்த சூறாவளி காற்று வீசித்தொடங்கிய சில வினாடிகளில் பலத்த காற்றுடன் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னி பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. அதேபோன்று சாலையோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. அதனை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.