உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழாவில் வழக்காடு மன்றம்

Published On 2022-07-19 15:11 IST   |   Update On 2022-07-19 15:11:00 IST
  • புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கம்பன் கழக பெருவிழாவில் சுகி சிவம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது
  • இன்றைய பெண்ணிற்கு கம்பன் நியாயம் வழங்கவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் தொடங்கியது. புதுகை பாரதி வழக்கை மறுத்து ராஜபாளையம் கவிதா ஜவஹர் பேசினார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா 10 நாட்கள் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான நேற்று முதலில் உரைகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழு உறுப்பினர் முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மணவாளன், தலைவர் வீரமுத்து, சதாசிவம், பரம்பூர் வர்த்தக சங்கம் தலைர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை முத்துநிலவன், கோவில்பட்டி சரவணச்செல்வன், லால்குடி ஜோதி உரையாற்றினர். இறுதியாக முத்துபாண்டியன் நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

தேசிய இலக்கிய மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் இப்ராகிம்பாபு, பொன்னமராவதி வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன், விவசாயிகள் சங்கம் தனபதி முன்னிலை வகித்தனர்.

சொல் வேந்தர் சுகிசிவம் நடுவராக இருக்க, இன்றைய பெண்ணிற்கு கம்பன் நியாயம் வழங்கவில்லை என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் தொடங்கியது. புதுகை பாரதி வழக்கை மறுத்து ராஜபாளையம் கவிதா ஜவஹர் பேசினார்.

இறுதியில் பெண்ணிற்கு துரோகம் இழைக்கவில்லை கம்பன் என தீர்ப்பு கூறினார். இறுதியாக ரவி நன்றி கூறினார்.

47-ம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கோவில்பட்டி கம்பன் கழக நிர்வாகிகளான நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் லெட்சுமணப்பெருமாள், செயலாளர் சரவணச்செல்வன், பொருளாளர் வினோத்கண்ணன், துணைத்தலைவர்கள் சிதம்பரம், ராஜாமணி ஆகியோருக்கு புதுக்கோட்டை கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் ச.ராமச்சந்திரன், செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினர்.

Tags:    

Similar News