உள்ளூர் செய்திகள்

நஞ்சராயன்குளம் பறவைகள் புகைப்படங்களுடன் காலண்டர் வெளியீடு

Published On 2023-01-20 12:27 IST   |   Update On 2023-01-20 12:27:00 IST
  • நமக்கு நாமே திட்டத்தில் கூடுதல் வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்ற தலைப்பில் கலர்புல் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் : 

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டிலுள்ள நஞ்சராயன் குளத்தில் தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. அதற்கான பூர்வாங்க பணி துவங்கியுள்ள நிலையில், நமக்கு நாமே திட்டத்தில் கூடுதல் வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் பறவைகள் சரணாலய பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த குளம், வனத்துறை வசம் வந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில் பறவைகள் படங்களுடன் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் என்ற தலைப்பில் கலர்புல் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் இயற்கை கழகத்தினரால் எடுக்கப்பட்ட பறவைகள் படங்களை வைத்து, வண்ணமயமான காலண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. குளத்தின் மொத்த தோற்றம், 12 வகையான பறவைகள் விவரம் மற்றும் போட்டோக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு பறவை படம், பெயர் மற்றும் பிற விவரங்களை தெரிவிக்கும், க்யூஆர். கோடு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News